ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க செயற்படுவார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் பல இணைந்து புதிய கூட்டணியை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன.
எவ்வாறெனினும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து கலந்துரையாடல் இடம்பெற்ற போதிலும் சஜித் பிரேமதாச முன்வைத்த நிபந்தனைகள் காரணமாக குறித்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததாக சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.