முன்னாள் அமைச்சர் கெஹெலியவுக்கு எதிரான ஊழல் வழக்கை விசாரிக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு நவம்பர் மாதம் 29ம் திகதி விசாரிக்கப்படுமென கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குறித்த வழக்கு இன்றைய தினம் ஆராயப்பட்டது. இதன்போது பிரதிவாதியான கெஹெலிய ரம்புக்வெல்ல மன்றில் ஆஜராகியிருந்தார்.

ஊடக அமைச்சராக செயற்பட்ட காலத்தில் தனது தனிப்பட்ட கையடக்க தொலைபேசிக்கான 240,000 ரூபா கட்டணத்தை அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் நிதியில் செலுத்தியதன் ஊடாக அவர் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


                                    




