நாடாளுமன்ற அமர்வுகள் இன்று (04) முதல் தொடர்ச்சியாக 5 நாட்கள் இடம்பெறவுள்ளன.
கடந்த வாரம் இடம்பெற்ற கட்சித்தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தின்போது, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி, இன்று (04) முதல் 8 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன.
கொவிட் பரவல் காரணமாகக் கடந்த காலத்தில் நாடாளுமன்ற அமர்வுகளைத் திட்டமிட்டப்படி நடத்த முடியாமல் போனது.
இதன் காரணமாக அரசாங்கத்தினால் இறுதி நேரத்தில் பதில் வழங்க முடியாமல் போன கேள்விகளுக்கான பதில்கள் இன்றைய தினம் வழங்கப்படவுள்ளன.
அதேநேரம், நாளைய தினம், நிதி மற்றும் வரி தொடர்பான கட்டளைகள் மற்றும் விதிமுறைகள் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளன.
கனிய எண்ணெய் வள சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, அடுத்த ஆண்டுக்கான பாதீடு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.
அது தொடர்பான ஒதுக்கீட்டு சட்டமூலம், இந்த வார நாடாளுமன்ற அமர்வில் நிதியமைச்சரினால் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.