புதிய ஜனாதிபதி செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அனுர குமார திசாநாயக்க இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.