Date:

தேர்தல் ஆணையாளரின் வேண்டுகோள்

தேர்தலில் வெற்றிபெறுபவர் எவராக இருந்தாலும் ஏனைய வேட்பாளர்களுக்கு அபகீர்த்தி ஏற்படாதவகையில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் செயற்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

 

கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிதுள்ளதாவது ” இன்று காலை முதல் வாக்களிப்பு சுமூகமான முறையில் வாக்களிப்பு இடம்பெற்றுவருகின்றது.

 

1 கோடியே 71 லட்சத்து 354 வாக்காளர்கள் வாக்களிக்கதகுதி பெற்றுள்ளனர்.நாடாளாவிய ரீதியில் 13 ஆயிரத்து 321 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் உள்ளன.

 

வாக்களிப்பு மத்திய நிலையங்களில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாலை நான்கு மணிவரை வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள நிலையில் வாக்குப்பதிவின் பின்னர் 1713 மத்திய நிலையங்களின் வாக்கு எண்ணும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

 

இதற்காக சுமார் 60 ஆயிரம் அதிகாரிக்ள வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். நீதியானதும் சுத்ந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிசெயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.இந்த நாட்டின் எதிர்காலத்தினை தீர்மானிக்கும் தீர்மானமிக்க தேர்தலாகும்.

எனவே தேர்தலி;ல வெற்றிபெறுவது யார் என்பதை விட தேர்தல் வெற்றியின் பின்னர் செயற்பட வேண்டிய விதம் மிக முக்கியமாகும்.வேட்பாளர்களுக்கு அபகீர்த்தி ஏற்படாத வகையில் ஆதரவாளர்கள் செயற்பட வேண்டும்.

அதாவது வெற்றிபெறும் வேட்பாளர் மற்றும் ஏனைய வேட்பாளர்களுக்கு அபகீர்த்தி ஏற்படாத வகையில் ஆதரவாளர்கள் செயற்பட வேண்டியது முக்கியமாகும். இலங்கையில் நடைபெறும் முழுஉலகின் கவனத்தினையும் ஈர்த்துள்ளது” இவ்வாறு சமன்ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரணிலுக்கு இத்தனை நோயா நோய் பட்டியல் இதோ

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோய் நிலை குறித்து சட்டத்தரணி அனுஜ...

“நாங்கள் எதற்கும் தயார்”

இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்த இலங்கை பொதுஜன பெரமுன (SLPP)...

சூம்’ தொழிநுட்பம் ஊடாக வழக்கில் இணைந்த ரணில்

அரச நிதியை முறைக்கேடாக பயன்படித்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கொழும்பு தேசிய...

Breaking ரணிலுக்கு சரீர பிணை

பத்து பேர் கொண்ட குழு மேற்கொண்ட தனியார் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்காக 16.6...