Date:

வடகிழக்கு பிரதேசத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்போம் என சஜித் தெரிவிப்பு

வைன் ஸ்டோர்ஸ் அனுமதிப்பத்திரம், மதுபான சாலை அனுமதி பத்திரம், என்பனவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள் எம்மிடம் இல்லை. விசேட வரங்களையும் வரப்பிரசாதங்களையும் பெற்றுக் கொண்டவர்கள் எம்மோடு இல்லை. இன, மத, குல, கட்சி பேதங்களின்றி நாட்டை கட்டியெழுப்புவதற்காக இணைந்து கொண்டவர்களே எம்மோடு இருக்கின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 58 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் செப்டம்பர் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேசத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

 

வடகிழக்கு பிரதேசத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்போம். நல்லிணக்க செயற்பாடுகளின் ஊடாகவே பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர முடியும். தொடர்ந்தும் அலறிக் கொண்டிருக்கின்ற பிரச்சினையை வைத்திருக்க முடியாது. அது நாட்டின் ஐக்கியத்தை பாதிக்கின்றமையால் நல்லிணக்கத்தை மையப்படுத்தி இளைஞர்களை வலுப்படுத்தும் வேலை திட்டத்தை முன்னெடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 

ஒன்றிணைந்த நாட்டிற்குள் அதிகார பகிர்வுக்காக குறுகிய காலத்திற்குள் மாகாண சபை தேர்தலை நடாத்துவோம். மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக்கொள்ளக் கூடாது.

 

அத்தோடு வடகிழக்கு மக்களுக்காக நன்கொடையாளர்கள் மாநாட்டை கூட்டுவோம் என்கின்ற கொள்கை திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, வடகிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பால் மாவின் விலை குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக...

விமலுக்கு பிடியாணை!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைபடுத்துமாறு கொழும்பு...

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு மரண தண்டனை...

ஈரானில் உள்ள அமெரிக்கர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

ஈரானில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா...