தென் அமெரிக்க நாடான ஈக்குவாடோரின் – குயாக்வில் நகரில் உள்ள சிறையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த மோதல் சம்பவத்தில் காயமடைந்த பலர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
அந்நாட்டின் வரலாற்றில் சிறைச்சாலையொன்றில் இடம்பெற்ற மோசமான சம்பவமாக இது கருதப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து நேற்றைய தினம் இந்த மோதலில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், 400க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சிறை வளாகத்தில் தொடர்ந்தும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.