Date:

ஜனாதிபதி வேட்பாளர் விவாதம் நாளை

‘மார்ச் 12 இயக்கம்’ ஏற்பாடு செய்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் விவாதத் தொடரின் முதலாவது விவாதம் நாளை (07) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் PAFRAL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, இந்த விவாதம் அனைத்து முக்கிய தொலைக்காட்சி அலைவரிசைகளிலும், 200க்கும் மேற்பட்ட சமூக ஊடக நெட்வொர்க்குகளிலும் 3.00 முதல் 5.00 வரை நேரடியாக ஒளிபரப்பப்படும்.

இதன்படி ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, திலித் ஜயவீர, நாமல் ராஜபக்ஷ மற்றும் பி. அரியநேத்திரன் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கு மக்கள் பிரசாரக் கூட்டங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

இதில் பங்கேற்பது கடினம் என்று ரணில் விக்கிரமசிங்கவின் தரப்பு எழுத்து மூலமாக தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இந்தியா பாகிஸ்தான் போட்டி தொடர்பில் புதிய தகவல்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026 டி20 உலகக் கிண்ண தொடரில் இந்தியா...

நாளை முதல் மாட்டிறைச்சிக்கு புதிய நிர்ணய விலை

மன்னார் மாவட்டத்தில் நாளை (10) முதல் அனைத்து மாட்டு இறைச்சி விற்பனை...

யோஷித ராஜபக்ஷவின் பாட்டி டெய்சி மனநிலையுடன் இருக்கிறாரா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது...

சபாநாயகருக்கு எதிராக அதிரடி விசாரணை

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மீது தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் இலஞ்சம்...