சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகள் அணைத்தும் இணைந்து கட்டியெழுப்பிய புதிய கூட்டணியை அறிவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
பிரதமர் தினேஷ் குணவர்தனவின் தலைமையில் புதிய கூட்டணியின் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. பத்தரமுல்லை வோட்டஸ் ஏட்ஜ் ஹோட்டலில் நிகழ்வு இடம்பெற்றது.
பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் புதிய முன்னணி உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன கூட்டணிக்கு தலைமை வகிக்கவுள்ளதுடன் அதன் செயலாளராக அமைச்சர் ரமேஷ் பத்திரண செயற்படுவார்.