Date:

கோத்தா கோ கம தொடர்பில் வெளியான அறிவிப்பு

கலிமுகத்திடல் “கோதா கோ கம” போராட்டத்தின் போது, ஜனாதிபதி மாளிகையைச் சுற்றியுள்ள வீதிகளில் அபாயகரமான வீதித் தடுப்புகளை வைத்து பொதுமக்கள் துன்புறுத்தப்பட்டதாகவும் அதன் ஊடாக மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று தீர்மானித்துள்ளது.

இதன்படி, இந்த முறைப்பாட்டின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி விளக்கமளிக்குமாறு அழைப்பாணை பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டத்தரணி சேனக பெரேராவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலித்த பிரிதி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

காலிமுகத்திடல் ‘கோத கோ கமா’ போராட்டத்தின் போது, ஜனாதிபதி மாளிகையைச் சுற்றியுள்ள வீதிகளில், பொதுமக்களுக்கு ஆபத்தான கூர்முனையுடன் கூடிய தடுப்புகளை பொலிஸார் அமைத்ததாக மனுதாரரான சட்டத்தரணியான நீதிமன்றில் தெரிவித்தார்.

 

இதுபோன்ற ஆபத்தான வீதித் தடுப்புகளை வைத்ததன் ஊடாக பொது மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்து, பிரதிவாதிகளிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டை பெற்றுத்தருமாறு மனுதாரர், உயர் நீதிமன்றில் கோரியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் இ.போ.ச.பணிப் புறக்கணிப்பு

இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் இன்று (27) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு...

விஜய்க்கு, அமைச்சர் விஜித பதிலடி

கச்சத்தீவு தீவின் உரிமை தொடர்பாக இந்திய மத்திய அரசாலோ அல்லது இராஜதந்திர...

வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற மூவர் கைது

45.8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை கடத்த முயன்ற மூன்று...

ரணிலின் தற்போதைய நிலை குறித்து வௌியான புதிய தகவல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்னும் இரண்டு நாட்களுக்கு கொழும்பு தேசிய...