நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய உச்ச நீதிமன்றம் தினமொன்றை நியமித்துள்ளது. எதிர்வரும் 27ம் திகதி மனு ஆராயப்படும்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான மொன்டேக சரத்ச்சந்திர இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.