Date:

இரண்டு மாத கால பொது மன்னிப்பு

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்போர் நாட்டை விட்டு வெளியேற இரண்டு மாத கால பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

 

நாளை (01) முதல் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

 

 

அந்நாட்டின் ஆட்பதிவு, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்பு அதிகார சபையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

தொழில் வழங்குனரின் சட்டப்பூர்வ அனுமதியின்றி பணியிடத்திலிருந்து விலகி இருப்பவர்கள் மற்றும் செல்லுபடியாகும் விசா இல்லாதவர்கள் இந்த பொது மன்னிப்புக் காலத்தில் அபராதம் அல்லது பிற சட்டத் தடைகளுக்கு உட்படாமல் நாட்டை விட்டு வெளியேறவோ அல்லது சம்பந்தப்பட்ட விசா ஆவணங்களை சட்டப்பூர்வமாக செயல்படுத்தவோ வாய்ப்புள்ளது.

 

 

 

ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் பொது மன்னிப்புக் காலத்தின் போது தமது விசாக்களை சட்டப்பூர்வமாக ஏற்பாடு செய்ய அல்லது இலங்கைக்கு திரும்புவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அஞ்சல் கட்டணங்கள் அதிரடியாக அதிகரிப்பு

உள்நாட்டு தபால் கட்டணங்கள் திங்கட்கிழமை (09) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அஞ்சல் மா...

25 தொன் ஈச்சம் பழங்களை வழங்கியது குவைத்

எதிர்வரும் வாரம் அனுஷ்டிக்கப்பட உள்ள புனித நோன்பு ரமலான் மாதத்தை முன்னிட்டு...

அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைப்படம்! அதிர்ச்சியில் பாகிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகள்

அமெரிக்கா, இந்தியாவுடன் தனது வலுப்பெறும் மூலோபாய உறவுகளை வெளிப்படுத்தும் வகையில், ஜம்மு–காஷ்மீர்...

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் ஊடாக,...