ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி ப்ளஸ் வரிச்சலுகையை எதிர்காலத்திலும் பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் நீதியமைச்சர் அலி சப்ரியின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினருடன் இந்தச் சந்திப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இலங்கைக்கு வழங்கப்படும் சலுகை குறித்து சாதகமான நடவடிக்கைகளை எடுப்பதாக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இதன்போது, குறிப்பிட்டதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இதன்படி, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அவர்கள் சாதகமான பதில்களை வழங்கியுள்ளதாக நீதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
A meeting between the delegation of the European Union and of the Ministry of Justice,lead by the Minister, was held at Ministry of Justice today.
The delegations discussed the current areas of cooperation as well as the Justice Sector Reform Programme of the @MOJSriLanka pic.twitter.com/zGFnHQ7fYZ
— Ministry of Justice Sri Lanka (@MOJSriLanka) September 28, 2021