துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலரை 2 அரச வங்கிகளுக்கு விடுவித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
தேவையேற்படின், மேலும் நிதியினை வழங்கத் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
டொலர் பிரச்சினை காரணமாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.
இதற்கமைய, குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 800 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியிருந்த நிலையில், அவற்றில் 400 கொள்கலன்கள் இதுவரையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.