வெஸ்லி கல்லூரியினால் நடாத்தப்பட்ட கல்லூரிகளுக்கிடையிலான இஸ்லாமிய தினப் போட்டியில் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி வெற்றி பெற்று, 2024 ஆம் ஆண்டிற்கான விளையாட்டின் முதன்மையானவர்கள் (Champions) பட்டத்தை வென்றுள்ளது. ஆகஸ்ட் 20, 2024 அன்று ராயல் இன்ஸ்டிடியூட் இன்டர்நேஷனல் மண்டபத்தில் நடைபெற்றது. பேச்சு, கட்டுரை எழுதுதல், கசீதா, ஆகியவற்றில் எங்கள் மாணவர்கள் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். கொழும்பில் உள்ள சிறந்த பல முன்னணிப் பாடசாலைகளுக்கு மத்தியில், பாடசாலையின் கல்வித் திறன் மற்றும் இஸ்லாமிய விழுமியங்கள் பற்றிய ஆழமான புரிதலை பிரதிபலிக்கின்றது. எங்கள் அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களால் வழிநடத்தப்பட்டு, எங்கள் முஸ்லிம் மஜ்லிஸின் ஆதரவுடன், குழு அறிவார்ந்த மற்றும் கலை திறன்களை மட்டுமல்லாது வலுவான தார்மீகத் தன்மையையும் வெளிப்படுத்தியது. இந்த வெற்றியானது எமது ஒட்டுமொத்த பாடசாலை சமூகத்தின் கடின உழைப்பிற்கும் , ஒற்றுமைக்கும் ஒரு சான்றாகும். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் !