Date:

“கமலா ஹாரிஸை விடவும் நான் தான் அழகு” -டிரம்ப்

‘கமலா ஹாரிஸை விட நான் தான் அழகாக இருக்கிறேன்” என்று, முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கூறியிருப்பது புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தல், நவ., 5இல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், சர்ச்சைகளின் நாயகனான முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் தோற்றுப்போய், தன் ஆதரவாளர்களை விட்டு கலவரம் செய்தது, ஆபாச பட நடிகை வாயடைக்க பணம் கொடுத்து விட்டு, போலிக்கணக்கு எழுதியது என அவர் மீதான சர்ச்சைகள் ஏராளம்.

அவரை எதிர்த்து, இந்த தேர்தலில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க உள்ளார். ‘அவரை எளிதில் வெற்றி கொள்வேன்’ என தம்பட்டம் அடிக்கும் டிரம்ப், கமலாவை தாறுமாறாக விமர்சனம் செய்கிறார். ‘இவ்வளவு காலம் இந்தியர் என்று கூறி வந்தவர், இப்போது கருப்பர் என தன்னை அடையாளப் படுத்துகிறார்” என்றும் கமலா பற்றி டிரம்ப் கூறியுள்ளார்.

இந்நிலையில், பென்சில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தில், கமலா ஹாரிசின் தோற்றத்தையும், புத்திசாலித்தனத்தையும் கடுமையாக சாடியுள்ளார்.

அவர் பேசுகையில், “நான் அவரை விட அழகாக இருக்கிறேன். நான் கமலாவை விட நல்ல லுக்காக இருக்கிறேன். எனக்கு இருக்கும் அழகுக்கும், அறிவுக்கும் இவரை எதிர்த்து போட்டியிட வேண்டியிருக்கிறது.

அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கு என்ன ஆனது? நான் அவரை எதிர்த்து களத்தில் இருக்கிறேன். ஆனால் பைடன் விலகிவிட்டார். இப்போது வேறு ஒருவருக்கு எதிராக போட்டியிடுகிறேன்” இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரணில் CIDயில் ஆஜராகின்றார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் புதன்கிழமை (11)அன்று குற்றப் புலனாய்வுத்...

முகக் கவசங்களை அணியுங்கள்;பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சுவாச நோய்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவது குறித்து அரசு வைத்திய...

ஜெனரல் துஷார இடைநிறுத்தம்

சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உபுல்தெனியவின் சேவைகளை உடனடியாக இடைநிறுத்த அரசாங்கம்...

சிறைச்சாலைகள் ஆணையாளர்கு கட்டாய விடுமுறை!

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை கட்டாய விடுமுறையில் அனுப்ப அமைச்சரவை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373