Date:

வட கொழும்பில் நடைபெற்ற ஜனனம் அறக்கட்டளையின் மாபெரும் இலவச புலமைப் பரிட்சை கருத்தரங்கு.!

 

    கலாநிதி ஜனகன் அவர்களின் எண்ணக் கருவில் ஜனனம் அறக்கட்டளையின்
கல்விக்கு கரம் கொடுப்போம் செயர்த்திட்டத்தின் ஊடாக கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த தரம் ஐந்து புலமைப் பரிசில் பரிட்சை எழுதும் மாணவர்களுக்கான மாபெரும் இலவச பரிட்சை வழிகாட்டல் கருத்தரங்கு இன்று(18)
கொழும்பு மாவத்த சென்ந் அந்தோணிஸ் தமிழ் வித்தியாலயத்தில் மிக பிரமாண்டமாக 300க்கும் மேற்பட்ட மாணவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

 

இக் கருத்தரங்கில் கலந்துகொண்ட
மாணவர்களில் இறுதியில் திறன்பட கேள்விகளுக்கு பதில் அளித்த தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாராட்டி, கேடயங்களை ஐ டி எம் ன் சி (IDMNC)சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் தவிசாளரும்,ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகன் அவர்கள் வழங்கி வைத்ததுடன்,மாணவர்கள்
மத்தியில் அறிவுரையும் ஆற்றினார்.

இக் கருத்தரங்கில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள்,ஜனனம் அறக்கட்டளையின் வடகொழும்பு முக்கியஸ்தர்கள்
என்று பலரும் கலந்து கொண்டனர்.

ஜனனம் அறக்கட்டளையின் கல்விக்கு கரம் கொடுப்போம் செயற்திட்டம் கொழும்பு மாவட்டம் தொடக்கம் நாடு பூராகவும் எமது கல்விப் பணியை பல வருடங்களாக முன்னெடுத்துக்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது “இந்துக்களின் பெருஞ்சமர்” நடைபவணி

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின் பெருஞ்சமர்" நடைபவணி 2026 மாணவர்களின்...

நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி...

மத்திய கிழக்கு மோதல்கள்: 4 இலங்கையர்கள் காயம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகத்...

குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம்

தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த...