Date:

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட இடைகால தடையுத்தரவு கோரி மனுத் தாக்கல்

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி சட்டத்தரணி ஒருவர், உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்;.

 

இந்த மனுவை சட்டத்தரணியான ஷான் ரணசூரிய தாக்கல் செய்துள்ளார்.

ஜனாதிபதி வேண்டுமென்றே அரசியலமைப்பை மீறியுள்ளமையினால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ரணில் விக்ரமசிங்க தகுதியற்றவர் என மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் வேட்பாளராக போட்டி ரணில் விக்ரமசிங்க தகுதியற்றவர் என இடைகால தடையுத்தரவொன்றை பிறப்பிக்குமாறு அவர் உயர்நீதிமன்றத்திடம் மனுவின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

 

பொலிஸ் திணைக்களத்திற்கு பதில் பொலிஸ் மாஅதிபர் ஒருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அரச பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளருக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட அரச பொறியியல்...

சுங்கம் தடுத்துள்ள வாகனங்களை விடுவிப்பது குறித்த அறிவிப்பு

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...

அரச பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் கைது

அரச பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் நிலு தில்ஹார விஜேதாச இலஞ்சம்...

இலங்கையில் 4 இலட்சத்தை எட்டவுள்ள தங்க விலை!

நாட்டில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று (16) மேலும்...