மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (11) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, பேலியகொட, வத்தளை, ஜா அல, கட்டுநாயக்க, சீதுவ நகரசபை பகுதிகளுக்கும், களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவாங்கொட, உள்ளூராட்சி சபை பகுதி மற்றும் கம்பஹாவின் ஒரு பகுதிக்கும் நீர்விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக சபை மேலும் தெரிவித்துள்ளது