Date:

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான நற்செய்தி

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு, 07 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் கண்டியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பள நிர்ணய சபையை அழைத்து, கலந்துரையாடவுள்ளதாக கூறிய ஜனாதிபதி, தேவை ஏற்படும் பட்சத்தில் புதிய சட்டங்களை வகுக்கவும் தயார் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பல வருடங்களாக செலுத்தப்படாதுள்ள ஊழியர் சேமலாப நிதியை எதிர்வரும் ஆண்டு முதல் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

 

இந்த நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன், பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இர‌வு வரை அபாய எச்சரிக்கை

மத்திய, வடமத்திய, சபரகமுவ, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களுக்கும், அம்பாறை மாவட்டத்திற்கும்...

பிலிப்பைன்ஸில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸின் யுனியன், சுர்காவோ தீவிலிருந்து 69 கிலோமீட்டர் ஆழத்தில் 6.1 ரிக்டர்...

உச்சத்தை தொட்டது தங்கத்தின் விலை

இலங்கையில் இன்று 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 4...

ஜெய்சங்கரை சந்தித்தார் பிரதமர் ஹரிணி

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, புதுடெல்லியில் இந்திய வெளியுறவு...