இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 35 ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக தேவ்தத் படிக்கல் 70 ஓட்டங்களையும், விராட் கோலி 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் டுவைன் பிராவோ 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்நிலையில்,157 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 18.1 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அணிசார்பில் அதிகபடியாக ருதுராஜ் கெய்க்வாட் 38 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஹர்ஷல் படெல் 25 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.