கொழும்பு – கண்டி பிரதான வீதியின் யக்கல சந்தியை அண்மித்து கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யக்கல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தை அடுத்தே இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பஸ் ஒன்றும், லொறி ஒன்றும் மோதுண்டு விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தை அடுத்துபோக்குவரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்