Date:

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தனிப்பட்ட வெற்றி தோல்வி அல்ல என ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், நாட்டின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்குமே அன்றி தனிப்பட்ட வெற்றி, தோல்வியாக அமையாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்

 

பொருளாதார சீர்திருத்த துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்து கொள்ளும் இளைஞர் பிரதிநிதிகளுடன் பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் நடைபெற்ற கொள்கை சீர்திருத்தம் தொடர்பான கருத்தாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அதன்படி முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் உதய செனவிரத்னவின் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஜீ.எல். வெர்னன் பெரேரா குழுவின் செயலாளராக செயற்படுவார்.

 

மேலும் அரச சேவையில் உள்ள பல்வேறு சேவைப் பிரிவுகளுக்கிடையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் குறித்து உரிய கவனம் செலுத்தி, 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அரச சேவையின் அனைத்துத் துறைகளிலும் உள்ள சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை மீளாய்வு செய்து திருத்தங்கள் தொடர்பான பரிந்துரைகளை நிபுணர் குழு சமர்ப்பிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உயர் தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு – CIDஇல் முறைப்பாடு

இம்முறை இடம்பெறும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே...

சீரற்ற காலநிலையினால் 9 பேர் பலி

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக...

திருமண பந்தத்தில் இணைந்தார் ஜீவன் தொண்டமான்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், திருமண...

நாளை முதல் மின்னணு பேருந்து கட்டணம்

பேருந்து பயணத்திற்கான மின்னணு அட்டை கட்டணங்களை அறிமுகப்படுத்தும் திட்டம் திங்கட்கிழமை (24)...