Date:

இலங்கை வருகின்றார் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை அடுத்தே, நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியாவின் சிரேஷ்ட அமைச்சரான S.ஜெயசங்கருடன் இன்று கலந்துரையாடல்களை நடாத்திய போதே, இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக இந்தியாவின் சிரேஷ்ட அமைச்சரான S.ஜெயசங்கர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு இந்தியாவின் சிரேஷ்ட அமைச்சரான S.ஜெயசங்கருக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

 

மேலும், இலங்கையில் இடைநிறுத்தப்பட்டுள்ள இந்திய முதலீட்டு திட்டங்களை மீள ஆரம்பிப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக தமது கப்பல்களை அனுப்பி ஒத்துழைக்குமாறு சீனா,...

ஈரான் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் தொலைபேசி உரையாடல்

ஈரான் வெளிவிவகார அமைச்சர் செய்யித் அப்பாஸ் அராக்சி (Seyed Abbas Araghchi),...

ஈரானுக்கு எதிரான போரிலிருந்து விலகிய இத்தாலி!

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி...

ஈரானின் 200 இலக்குகளை 24 மணி நேரத்தில் தாக்கிய இஸ்ரேல்

கடந்த 24 மணி நேரத்தில், ஈரான் அரசின் 200 இற்கும் மேற்பட்ட...