Date:

டெங்கு நோய் தொடர்பில் அவதானம்

நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

தற்போது நாளாந்தம் சுமார் 100 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 25,619 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய மேல் மாகாணத்தில் மாத்திரம் 9,348 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேல் மாகாணம் மாத்திரமின்றி வடமேல், தென், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் டெங்கு நோய் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டுமென தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஒத்துழைக்குமாறு ட்ரம்ப் கோரிக்கை

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக தமது கப்பல்களை அனுப்பி ஒத்துழைக்குமாறு சீனா,...

ஈரான் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் தொலைபேசி உரையாடல்

ஈரான் வெளிவிவகார அமைச்சர் செய்யித் அப்பாஸ் அராக்சி (Seyed Abbas Araghchi),...

ஈரானுக்கு எதிரான போரிலிருந்து விலகிய இத்தாலி!

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி...

ஈரானின் 200 இலக்குகளை 24 மணி நேரத்தில் தாக்கிய இஸ்ரேல்

கடந்த 24 மணி நேரத்தில், ஈரான் அரசின் 200 இற்கும் மேற்பட்ட...