சுவிட்சர்லாந்தில் KP.2 என்ற புதிய வகை கொவிட் மாறுபாடு பரவ ஆரம்பித்துள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
கோடை மாதங்கள் முழுவதும் இந்த கொவிட் மாறுபாடு இருக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறித்த கொவிட் மாறுபாடு வேகமாகப் பரவி வருவதாகவும் இது தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்தது.
அத்தோடு, புதிய கொவிட் மாறுபாடு அதன் தீவிரப் போக்கை இன்னும் வெளிப்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.