தன்னை பதவியிலிருந்து நீக்குவதற்கான மோசடி நடவடிக்கை இடம்பெற்று வருவதாக பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்றைய (07ழு) நாடாளுன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“என்னை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு பொது நிதி தொடர்பான குழு உறுப்பினர்களிடமிருந்து கையெழுத்து சேகரிக்கப்பட்டு வருகின்றது.
உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் நான் பதவி விலகுவதற்கு தயாராக உள்ளேன்.
பொது நிதி தொடர்பான குழுவின் தலைவராக நான் கடமையாற்றிய போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
சி.ஓ.பி.எப் மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) மீது வைத்திருக்கும் நிலைப்பாட்டை பின்பற்றியதால் நான் நீக்கப்பட்டேன்,”
சீனி ஊழல் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்தி செலுத்தும் வரியை 24 சதவீதமாக குறைக்கும் திட்டத்தை கொண்டு வர முடிந்தது.
மேலும், பொது நிதி தொடர்பான குழுவுடன் தொடர்புடைய பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க தனது
தனிப்பட்ட நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்றார்.
“இந்த பிரச்சினைகள் காரணமாக என் அழுத்தம் அதிகரிக்கும், நான் மரணிக்க நேரிடும்
நானும் பதற்றத்தில் உள்ளேன்” என ஹர்ஸ டி சில்வா ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.