இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத்தில் ஒலிபரப்பாகும் சிறுவர் நிகழ்ச்சியின் தயாரிப்பாளராக கடமையாற்றிய இந்துனில் ஜயவர்தன சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் இன்று (05) இந்துனில் ஜயவர்தனவின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிலியந்தலை பகுதியில் வசித்து வந்த அவர், கடந்த இரண்டு தினங்களாக காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்துனில் ஜயவர்தனவின் உயிரிழப்பு தொடர்பில் பொலிஸார், விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்துனில் ஜயவர்தன, ரூபவாஹினி கூட்டுதாபனத்தின் பயிற்சி நிறுவனத்தில் பகுதி நேர விரிவுரையாளராக பணியாற்றியுள்ளதுடன், இதற்கு முன்னர் லக்பிம பத்திரிகை, சுவர்ணவாஹினி தொலைக்காட்சி போன்ற ஊடக நிறுவனங்களிலும் கடமையாற்றியுள்ளார்