மூன்றாவது தடவையாக இந்திய பிரதமராக பதவி பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ள நரேந்திர மோடியின் பதவி பிரமாண நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிவடைந்த தேர்தலில் வெற்றியீட்டிய நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி ஊடாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதன்போது, தனது பதவி பிரமாண நிகழ்விற்கு பிரசன்னமாகுமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
நரேந்திர மோடியின் பதவி பிரமாண நிகழ்வு எதிர்வரும் 08ம் திகதி மாலை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.