சமையல் எரிவாயு விலை குறைவடைந்துள்ள நிலையில், சில உணவு வகைகளின் விலைகுள் இன்று (05) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
இதன்படி, ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகள் 25 ரூபாவால் குறைக்கப்படவுள்ளன.
பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட ஏனைய சிற்றுணவு வகைகளின் விலைகள் 10 ரூபாவால் குறைக்கப்படுகின்றன,
அதேபோன், தேநீர் கோப்பை ஒன்றின் விலை 5 ரூபாவால் குறைக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.