கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன.
உயர்தர பெறுபேறுகளை பார்வையிட www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிக்கவும்.
இம்முறை நடைபெற்ற கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் 1,73,444 பேர் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், 190 மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிடுகின்றது.
இதேவேளை, கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மீள் திருத்தத்திற்காக http://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தின் ஊடாக ஜுன் மாதம் 05ம் திகதி முதல் 19ம் திகதி வரை விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.