Date:

ரயில் சேவைகள் தாமதம்

பல்லேவெல மற்றும் கனேகொட ரயில் நிலையங்களுக்கும் வெயங்கொட மற்றும் கம்பஹா ரயில் நிலையங்களுக்கும் இடையில் சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பிரதான மார்க்கத்தின் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரயில்வே துணைப் பொது முகாமையாளர் ஜெ.என்.இந்திபொலகே இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, சீரற்ற வானிலையுடன் பிரதான மார்க்கம், கரையோர மார்க்கம் மற்றும் புத்தளம் மார்க்கத்திலும் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சில ரயில்கள் சேவைகள் தாமதமாக வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல ரயில் நிலையங்களுக்கு இடையில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையினால் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

வகை மற்றும் கொஸ்கம ரயில் நிலையங்களுக்கு இடையிலான பாலம் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் களனிவெளி மார்க்கத்தில் பயணிக்கும் ரயில்கள் வகை ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அஞ்சல் கட்டணங்கள் அதிரடியாக அதிகரிப்பு

உள்நாட்டு தபால் கட்டணங்கள் திங்கட்கிழமை (09) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அஞ்சல் மா...

25 தொன் ஈச்சம் பழங்களை வழங்கியது குவைத்

எதிர்வரும் வாரம் அனுஷ்டிக்கப்பட உள்ள புனித நோன்பு ரமலான் மாதத்தை முன்னிட்டு...

அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைப்படம்! அதிர்ச்சியில் பாகிஸ்தான் மற்றும் ஏனைய நாடுகள்

அமெரிக்கா, இந்தியாவுடன் தனது வலுப்பெறும் மூலோபாய உறவுகளை வெளிப்படுத்தும் வகையில், ஜம்மு–காஷ்மீர்...

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச செயலகங்களுக்குப் பரவலாக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் ஊடாக,...