அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு மூவர் உயிரிழந்துள்ளனர்.
78, 36 மற்றும் 07 வயதான மூவரே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெண் ஒருவரும், சிறுமி ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன், அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
மண்மேடு மண்மேடு சரிந்ததில் மேலும் இருவர் உயிரிழப்பு
கம்பஹா – பல்லேவல – தெய்யந்தர பகுதியிலுள்ள வீடொன்றின் மீது நேற்றிரவு (01) மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் 20 மற்றும் 27 வயதான இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த மண்மேடு சரிந்ததில் மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில், எல்லேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தோரின் சடலங்கள் எல்லேவெல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தெய்யந்தர விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்