ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களை இரண்டு வருடங்களுக்கு ஒத்தி வைக்க ஐக்கிய தேசியக் கட்சி யோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இதற்கான யோசனையை பாராளுமன்றத்தில் சமர்பித்து, மக்கள் கருத்து கணிப்பொன்றை நடாத்தவும் யோசனை முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களை இந்த ஆண்டு நடாத்த வேண்டிய சூழ்நிலையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்