Date:

இரத்தினபுரி மாவட்டத்தின் பல இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களு கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதை அடுத்தே, வெள்ள அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நேற்று (27) பகல் முழுவதும் பெய்த மழையை தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்படி, இரத்தினபுரி, பெல்மதுல்ல, நிவித்திகல, எலபாத்த, குருவிட்ட மற்றும் கிரியெல்ல பிரதேச செயலக பிரிவுகளுக்கு இந்த மேலும் களுகங்கையின் இரு கரைகளிலும் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

இன்று பிற்பகல் கணிசமான மழைவீழ்ச்சி ஏற்பட்டால் நிலைமை கடுமையாக மாறக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது

இது தவிர அத்தனகல்லு குளம் மற்றும் களனி ஆற்றின் நீர் மட்டம் அதிகளவில் காணப்படுவதால், அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...

ரஷ்யாவில் இரகசியச் சிகிச்சை? ஈரானின் புதிய தலைவர் கடிதம்!

யுத்த மோதல்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா...

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது – ட்ரம்ப்

ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என்றும், அந்நாட்டின் பிரதான எரிபொருள் மையமான...

நீர் வெட்டு அமுல் தொடர்பில் வௌியான தகவல்

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று...