ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன் ஆகியோரை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் ஜனாதிபதி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பயணித்த ஹெலிகொப்டர், அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
கடும் பனிமூட்டமுடனான சீரற்ற வானிலை காரணமாக, கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் தரையிறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
எனினும், ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகி காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் தொடர்பான தகவல்கள் கிடைக்காமை காரணமாக, அவர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டிருக்குமா என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஈரான் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.