இவ்வருடத்தின் மூன்று மாதங்களில் 49 கைதிகள் சிறைச்சாலைகளில் இருந்து தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தப்பியோடியவர்களில் இருவர் மாத்திரமே இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப்பேச்சாளருமான காமினி பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தப்பியோடியவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.