(நுவரெலியா நிருபர்)
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து மாலை வேளை கடும் மழை பெய்து வருகிறது.
அத்துடன் பிரதான வீதிகளில் பல இடங்களில் பனியுடனான காலநிலை நிலவி வருகிறது .
குறிப்பாக நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் ருவான் எலியா, பிளாக்பூல் , வெண்டிகோனர் உள்ளிட்ட பகுதிகளிலும் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதி மற்றும் நுவரெலியா – பதுளை , நுவரெலியா -கண்டி உள்ளிட்ட பிரதான வீதிகளிலும் அடிக்கடி கடும் பனி மூட்டம் அதிகம் காணப்படுகின்றது .
இதனால் வாகனச் சாரதிகள் பனி மூட்டம் மற்றும் மழையுடனான காலநிலை நிலவும் போது தமது வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தவாறு பயன்படுத்துவதன் மூலம் விபத்துகளை தவிர்த்துக் கொள்ளலாம் என நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளன.