Date:

பதுளையை உழுக்கிய கோர விபத்து

பதுளை – புவக்கொடமுல்ல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்

குறித்த விபத்து இன்று முற்பகல் 10 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெஹிஅத்தகண்டிய பகுதியிலிருந்து பதுளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 

 

இந்த விபத்தில் 79 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

 

குறித்த பகுதியிலுள்ள வளைவொன்றில், குழாய் நீர் பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றமையினால், ஒரு வழி போக்குவரத்து மாத்திரம் இடம்பெற்றமையே இந்த விபத்துக்கான காரணம் என தெரிய வந்துள்ளது.

 

 

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வடக்கு – கிழக்கு ஹர்த்தால் குறித்து அரசின் நிலைப்பாடு!

அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் திரிபுவாதங்கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்களால்...

நீரில் மூழ்கி இதுவரை 257 பேர் பலி

நாடு முழுவதும் இந்த ஆண்டு (2025) இதுவரை நீரில் மூழ்கிய சம்பவங்களில்...

மூன்றாம் தவணை நாளை ஆரம்பம்

2025ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார்...

பாக். மழையில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள மாகாணமான கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஏற்பட்ட...