அவிசாவளை மனமேந்திர மாவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்டதாக அவிசாவளை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
வலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணுடன் விடுதியில் தங்கியிருந்த நபர் பெண் மயங்கி விழுந்துள்ளதாக ஹோட்டல் நிர்வாகத்திடம் தெரிவித்ததையடுத்து,அவிசாவளை தலைமையக பொலிஸாருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.