நாட்டில் இன்றையதினம்(8) தங்கத்தின் விலையானது சற்று உயர்வடைந்துள்ளது.
முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி 24 கரட் தங்க கிராம் 24,640 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 197,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்க கிராம் 22,590 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுண் 180,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,560 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 172,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.