Date:

பெண்ணை பணயக்கைதியாக வைத்திருந்த நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் சாவு !

மாவனெல்லை – படிதொர கிராமத்தில் வசிப்பவர்களை அச்சுறுத்தி பெண்ணொருவரை பணயக்கைதியாக வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.

நேற்று (06) இரவு இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாவனெல்லை பகுதியை சேர்ந்த ஜயதிலக்க என்ற 52 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த நபர் கூரிய வாள்களுடன் மக்களை அச்சுறுத்துவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள், உயிரிழந்த நபர் பெண் ஒருவரை பணயக்கைதியாக வைத்திருப்பதை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த பெண்ணை காப்பாற்ற சென்ற போது இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை அவர் வாளால் தாக்கியுள்ளார்.

இதன்போது குறித்த பெண்ணை காப்பாற்ற சந்தேகநபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் சிகிச்சைக்காக மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில்...

“தேவையற்ற பஸ் பயணங்கள் வேண்டாம்”

தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், அத்தியாவசியமற்ற நேரங்களில் இடம்பெறும் சேவைகளைக்...

ஹோர்முஸ் நீரிணையை திறக்க சீனாவிடம் உதவி கோரிய ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணையில் தற்போது கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க சீனா...

டுபாய், குவைத், சவூதி மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஐக்​கிய அரபு அமீரகத்​தின் டுபாய், குவைத், சவூதி அரேபியா, பஹ்ரைன், கட்டாரை...