தேசிய புத்தரிசி விழா நேற்றையதினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அனுராதபுரத்தின் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ மஹாபோதிக்கு அருகில் நடைபெற்றது.
பாரம்பரியமாக பெரும் போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லின் முதல் பகுதியை ஜய ஸ்ரீ மஹாபோதிக்கு காணிக்கையாக செலுத்தும் வருடாந்த புத்தரிசி விழா, இதுவாகும்.
அடமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரரின் ஆலோசனைக்கு அமைவாக விவசாய அமைச்சு மற்றும் கமநல சேவைகள் திணைக்களத்தினால் 57 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மன்னர் காலத்தில் இருந்து நடைபெற்று வரும் இந்த சம்பிரதாயத்துக்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான விவசாயிகள் திரண்டு வந்து, மழை, விளைநிலங்கள் செழிக்க” வேண்டியும், விவசாயத்தில் நாடு தன்னிறைவு அடைந்து வளமான பொருளாதாரம் ஏற்பட வேண்டியும் பிரார்த்தனை செய்தனர்.
தேசிய புத்தரிசி விழாவின் நினைவுப்பதிப்பும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
அநுராதபுரம் மாவட்ட விவசாய அமைப்பின் தலைவர் புஞ்சிரால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் விவசாயப் பிரேரணையை முன்வைத்தார்.
ஆதிவாசித் தலைவர் வன்னில எத்தோ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேன் வழங்கினார்.