Date:

மின்சார வேலியில் சிக்கி குடும்பஸ்தர் பரிதாப மரணம் !

அனுராதபுரம் – இபலோகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கெலேதிவுல்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இபலோகம பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள காணியொன்றிற்குச் சென்றிருந்த போது காணியைச் சுற்றியிருந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இந்த காணியின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, உயிரிழந்தவரது சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐரோப்பாவில் சாதித்துக் காட்டிய மன்னார் இளைஞர்

மன்னார் – விடத்தல்தீவைச் சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி...

Breaking சீதுவையில் துப்பாக்கிச் சூடு

சீதுவை, ராஜபக்ஷபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து...

ரோஹிதவின் மகள் மற்றும் மருமகனுக்கு பயணத் தடை

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் மருமகனுக்கு வெளிநாட்டுப் பயணத்...

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் 30 நிமிடங்கள் நீட்டிப்பு

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் முப்பது நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக...