Date:

மதுபோதையில் வந்த கணவனுக்கு மரண தண்டனை வழங்கிய மனைவி – இலங்கையில் கொடூரம் !

மாத்தறை வெலிகம பிரதேசத்தில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த கணவர், தனது மனைவியால் தாக்கப்பட்டு உயிரிழந்த  சம்பவம் பதிவாகியுள்ளது.

42 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மாத்தறை, வெலிகம, கொஸ்கஹஹேன பிரதேசத்தில் வசிக்கும் இவர், நேற்றுமுன்தினம் இரவு மது போதையில் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியை தாக்கியதால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந் நிலையில் இவர் நேற்றுமுன்தினம் இரவு குடிபோதையில் வந்து மனைவியை தாக்க முயன்றார்.

இதன்போது மனைவி அயலவர்கள் சிலருடன் இணைந்து சேர்ந்து வீட்டின் முன் உள்ள மின்கம்பத்தில் கணவனை கட்டிப்போட்டுள்ளார்.

பின்னர், அவரது மனைவி உள்ளிட்டவர்கள் அவரைத் தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் மயக்கமடைந்த அவர், வெலிகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கட்டப்பட்ட கயிற்றில் கழுத்து இறுகி இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவியை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐரோப்பாவில் சாதித்துக் காட்டிய மன்னார் இளைஞர்

மன்னார் – விடத்தல்தீவைச் சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி...

Breaking சீதுவையில் துப்பாக்கிச் சூடு

சீதுவை, ராஜபக்ஷபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து...

ரோஹிதவின் மகள் மற்றும் மருமகனுக்கு பயணத் தடை

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் மருமகனுக்கு வெளிநாட்டுப் பயணத்...

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் 30 நிமிடங்கள் நீட்டிப்பு

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் முப்பது நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக...