நாடளாவிய ரீதியில் கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனைச் செயற்பாடுகளில் பாதாள கும்பலைச் சேர்ந்த ஒன்பது பேருடன் மேலும் மூவர் கைதாகினர்.
மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெறும் பாதாள உலக குற்றச் செயற்பாடுகளை இலக்கு வைத்து,இச்சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கோனாபீனுவெல பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 32 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.பேருவளை பிரதேசத்திலும் 360 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைதானார்.
ஹிக்கடுவை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியிலும் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதிலும் 32 வயதுடைய நபரொருவர் கைதானார்.
களுத்துறை, நீர்கொழும்பு மற்றும் கணேமுல்ல உள்ளிட்ட பகுதிகளிலும் இவ்வாறு சோதனைகள் மேற்கொள்ளப்பட் டன.வன்முறைகளைத் தூண்டி மக்களின் சொத்துக்களைப் பறித்தல்,போதை வியாபாரம் உள்ளிட்டவற்றை ஒழிக்கும் நோக்கில் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.