ஹோகந்தர வடக்கில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை இணையத்தில் விற்பனை செய்த இருவரை பொரலஸ்கமுவ பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் 25 மற்றும் 26 வயதுடைய ஹோகந்தர வடக்;கு பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட போது, ஹெரோயின் 12 கிராம் மற்றும் 400 மில்லிகிராமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, விற்பனை செய்யப்பட்ட 6 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதென பொலிஸார் தொரிவிக்கின்றனர்.