Date:

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் படுகாயம் !

பொலிஸாரால் திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது பொலிஸாரின் ​​துப்பாக்கி சூட்டில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி, நிஹால் தல்துவ தெரிவித்தார்.

திஸ்ஸமஹாராம பொலிஸாருக்கு நேற்றிரவு 12.00க்கும் 1.00 மணிக்கும் இடையில் அப்பகுதியில் உள்ள சூதாட்ட நிலையம் ஒன்றை சோதனையிட மூவர் அடங்கிய பொலிஸ் குழுவொன்று சென்றுள்ளது.

பொலிசார் அங்கு சென்றதும் சூதாட்ட​ நிலையத்தில் இருந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் அவர்களை கைது செய்ய முயன்ற போது ​​பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபருக்கும் இடையில் முறுகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது துப்பாக்கி இயங்கியதில் காயமடைந்த 28 வயதுடைய இளைஞர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் திஸ்ஸமஹாராம பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எல்ல – வெல்லவாய விபத்து : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் கடந்த 4ஆம் திகதி இரவு...

“சம்பத் மனம்பேரி” குறித்து மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட...

ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

சட்டவிரோதமாக 270 மில்லியனுக்கும் அதிக பெறுமதிக் கொண்ட சொத்துக்களை ஈட்டிய விதம்...

அத்துரலியே ரத்தன தேரருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் செல்ல அனுமதித்து நுகேகொடை...