ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிரேஸ்ட முன்னாள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் கிடைத்துள்ளது.
எனினும் அவர் எந்த காரணத்திற்காக விலகத் தீர்மானித்துள்ளார் என்ற விடயம் இதுவரை வௌியாகவில்லை.
எவ்வாறாயினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இந்தப் பதவிவிலகல் இடம்பெறவிருப்பதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.