Date:

ஏற்றுமதி தடையால் நாட்டில் வெங்காயத்தின் விலை அதிகரிக்கும் அபாயம் !

வெங்காய ஏற்றுமதிக்கான தடையை இந்தியா காலவரையின்றி நீடிப்பதால், நாட்டில் வெங்காயத்தின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பரில் இந்தியா விதித்த தடை வரும் 31ம் திகதியுடன் முடிவடைவதாக இருந்தது.

இந்த நாட்டில் வெங்காயத்தின் வருடாந்த நுகர்வு சுமார் 250,000 மெட்ரிக் டன்கள் மற்றும் அதில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்தியா விதித்துள்ள இந்த தடையால் பல நாடுகளில் வெங்காயத்தின் விலை வேகமாக அதிகரித்துள்ள நிலையில்,

ஏற்கனவே இலங்கை சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் 600 முதல் 700 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

எவ்வாறாயினும், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 375 ரூபா தொடக்கம் 400 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் நுகர்வோருக்கு கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அண்மையில் தெரிவித்தார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் இஸ்ரேல் – பாலஸ்தீன இரு நாடுகள் தீர்வுக்கு இலங்கை உள்ளிட்ட 142 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு இடையேயான...

எல்ல – வெல்லவாய விபத்து : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் கடந்த 4ஆம் திகதி இரவு...

“சம்பத் மனம்பேரி” குறித்து மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட...

ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

சட்டவிரோதமாக 270 மில்லியனுக்கும் அதிக பெறுமதிக் கொண்ட சொத்துக்களை ஈட்டிய விதம்...